search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டென்சென்ட் கார்ப்"

    பப்ஜி மொபைல் கேமினை உருவாக்கிய பப்ஜி கார்ப் நிறுவனம் கடந்த ஆண்டு முழுக்க ஈட்டிய வருவாய் தொகை விவரம் வெளியாகியுள்ளது. #PUBG



    உலகின் பிரபல கேமாக இருக்கும் பப்ஜியை உருவாக்கிய பப்ஜி கார்ப் நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் 92 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.6,362 கோடி) வருவாய் ஈட்டியிருக்கிறது. இதில் மொத்த லாபம் 31 கோடி (இந்திய மதிப்பில் ரூ.2,143) ஆகும்.

    மொத்த வருவாயில் பெருமளவு பங்கு கம்ப்யூட்டருக்கான பப்ஜியில் இருந்து கிடைக்கிறது. முதற்கட்டமாக பப்ஜி கேம் கம்ப்யூட்டரில் அறிமுகமாகி அதன்பின் இதன் மொபைல் பதிப்பை டென்சென்ட் கேம்ஸ் உருவாக்கியது. பப்ஜி கேம் விதிகளை பொருத்தவரை கேம் துவங்கும் போது பயனர் வானில் இருந்து தீவு ஒன்றில் இறங்க வேண்டும்.



    தீவில் இறங்கியதும் அவர்களுக்கான சவால்கள் இருக்கும், அவற்றை எதிர்கொண்டு தனியே இருக்கும் கடைசி நபர் வெற்றி பெற்றவராக முடியும். கம்ப்யூட்டருக்கான பப்ஜி கேம் மட்டும் சுமார் 79 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.5,463 கோடி) வருவாய் ஈட்டியிருக்கிறது.

    கன்சோல்கள் மற்றும் மொபைல் பதிப்புகளில் இருந்து பப்ஜி கேம் வருவாய் முறையே ரூ.414 கோடி மற்றும் ரூ.450 கோடிகளை ஈட்டியிருக்கிறது. பப்ஜி கார்ப் வருவாய் விவரங்கள் VG247 மூலம் வெளியாகியிருக்கிறது. பப்ஜி கேம் ஆசிய கண்டத்தில் மிகவும் பிரபலமான கேமாக இருக்கிறது.

    ஆசியாவில் மட்டும் பப்ஜி வருவாயில் சுமார் 53 சதவிகிதம் வருவாய் கிடைத்திருக்கிறது. ஆசியாவை தொடர்ந்து வட அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்டவை அதிக வருவாய் ஈட்டித்தரும் பகுதிகளாக இருக்கின்றன.
    ×